கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதை தொடர்ந்து மலிவு விலையில் கள்ளச்சாராயம் கிடைக்கிறது என்று அதனை பலரும் வாங்கி அருந்தி வாந்தி மயக்கம் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதில் பலரும் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை ஏற்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றன. இந்த செய்தி தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றன.ர் அதில் ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் இதுவரை 16 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் விச சாராய விவகாரத்தில் சாராயம் விற்பனை செய்த சின்னத்துரை என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு முன்னதாக சின்னதுரை கண்ணு குட்டி என்ற கோவிந்தராஜனுக்கு சாராயத்தை விற்பனை செய்துள்ளார் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.