
கள்ளக்குறிச்சி கள்ள சாராய சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தியதில் கோட்டைமேடு, கருணாபுரம் உள்ளிட்ட கிராமத்தைச் சார்ந்த சுமார் 229 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் நரம்பு மண்டலம் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகம் சீரழிப்பு போன்ற காரணத்தினால் 65 பேர் பலியாகினர்.
மேலும் 135 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலர் உயிருக்கு போராடி வருகின்றனர். 4.5% மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தியதால் அவர்கள் உயிருக்கு மிகவும் கேடு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தில் 8.6% முதல் 29.7% வரை மெத்தனால் கலக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த கள்ள சாராயம் தான் இவர்களது உயிர்களை காவு வாங்கியதுடன் அவர்கள் குடும்பங்களையும் தவிக்க விட்டுள்ளது என்ற உண்மை வெளியே வந்துள்ளது. இந்த கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அதிமுக, பாமக மற்றும் பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் இந்த உண்மை வெளியே வந்தது. மேலும் மரக்காணம் -செங்கல்பட்டு கள்ள சாராயத்தில் 99 சதவீதம் மெத்தனால் கலக்கப்பட்டிருந்ததாகவும் இதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி சம்பவம் இல்லை என்றும் இதில் விசாரணை விரிவாகவும் துரிதமாகவும் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் பத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தலைமை செயலாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜூலை 11ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.,