இந்த நவீன காலகட்டத்தில் ஒவ்வொருவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் என்பது அவசியமாக இருக்கிறது. வீட்டில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் என்று கூறும் அம்மா அப்பா குழந்தைகள் கூட இன்று ஸ்மார்ட் ஃபோன்களை தான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். பெரியோர்களில் இருந்து சிறியவர்கள் வரை இந்த ஸ்மார்ட் போனை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இரண்டு வயது குழந்தை கூட இந்த ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறது என்று அனைவரின் வீட்டில் இருக்கும் பெற்றோர்களுக்கும் இது தெரியும்.
இந்த வகையில் ஒரு சிலர் கழிவறைக்கு செல்போனோடு தான் செல்வார்கள். அதில் என்னதான் இருக்கிறது ஏன் இவ்வளவு நேரம் கழிவறையில் செலவிடுகிறாய் என்று தெரியவில்லை என்று காலையில் அம்மாவின் சத்தம் கிச்சனிலிருந்து கேட்கும். இல்லது மனைவியின் சத்தம் கிச்சனிலிருந்து கேட்கும். அந்த அளவிற்கு இந்த செல்போன் என்பது அனைவரின் வீட்டிலும் பேசப்படுகிறது. ஒரு சிலர் எந்நேரமும் இந்த போனை வைத்து பார்ப்பதையே ஒரு வேலையாக வைத்துள்ளனர். அந்த அளவிற்கு கழிவறைக்கு செல்லும் போது ஸ்மார்ட் ஃபோன்களை எடுத்துக்கொண்டு கழிவறையில் இந்த ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்துகின்றனர். கழிவறையில்ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தும் நபர்களுக்கு தான் இந்த பதிவு.
கழிவறையில் ஸ்மார்ட்போன்களை ஒருபொழுதும் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில்,
கழிவறையில் அதிகமாக ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தி அதிக அளவு நேரத்தை கழிவறையில் செலவிடுகிறார்கள். இது உடலுக்கு மிகவும் கெட்டது. ஏனென்றால், கழிவறையில் இருக்கும் மோசமான பாக்டீரியாக்களைவிட ஸ்மார்ட் ஃபோன்களில் அதிகமான மோசமான பாக்டீரியாக்கள் நிறைந்து இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் ஸ்மார்ட் ஃபோன்களின் தொகுதிகள் அதனை ஒரு திரவம் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் அதை யாரும் செய்வதில்லை இதனால் கழிவறையில் உள்ள மோசமான பாக்டீரியாவும் இந்த போனில் உள்ள மோசமான பாக்டீரியாவும் சேர்ந்து நமது உடலில் உள்ள ஆரோக்கியத்தை சீர்குலைத்து அதிகப்படியான நோய்களை பர நம் உடலில் உண்டாக்கும். கழிவறையை அதிகமாக பயன்படுத்துவது அங்குள்ள மோசமான பாக்டீரியாவை நாமே நம் உடலுக்குள் புகுத்திக் கொள்வதற்கு சமமாகும். ஏனென்றால், ஸ்மார்ட்போன் கழிவறையில் பயன்படுத்தும் போது அதில் ஒட்டிக் கொள்ளும் மோசமான பாக்டீரியா கழிவறையை விட்டு வெளியே செல்லும் போதும் அந்த போனை தடுப்பது நமக்கும் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கழிவறையில் ஒருபோதும் ஸ்மார்ட்போன்களையும், போன்களையும் பயன்படுத்தாதீர்கள்.




