
கழுத்தில் உள்ள கருமை நீங்குவதற்கு இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான். கழுத்தில் மட்டும் கருப்பாக இருப்பது. கழுத்தில் உள்ள கருமை எதனால் ஏற்படுகிறது என்றால். ஒரு சிலருக்கு திடீர் உடல் பருமன் காரணமாகவும் ஒரு சிலருக்கு ஹார்மோன் குறைபாடு காரணமாகவும், ஒரு சிலருக்கு செயின் போடுவதாலும் கழுத்து கருப்பாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. இந்நிலையில் இந்த கழுத்தில் உள்ள கருப்பை நீக்குவதற்கு எந்தவித பார்லரும் செல்லாமல் வீட்டிலேயே இதை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
கோதுமை மாவு மற்றும் பாசிப்பயிறு மாவு மற்றும் ஓட்ஸ் மாவு சம அளவு கலந்து பால் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பின்பு அதை கருப்பாக உள்ள இடத்தில் தேய்த்து கழுவினால் கருமை நீங்கும். வெங்காயத்தை எடுத்து அதில் சாறு பிழிந்து அந்த சாறை சிறிதளவு ரோஸ் வாட்டர் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கருப்பாக உள்ள இடத்தில் லேசாக மசாஜ் செய்து வந்தால் கழுத்தில் இருக்கும் கருப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைவதை நாம் கண்கூட பார்க்க முடியும்.