தேவையான பொருள்: சித்தா முட்டி வேர் 20 கிராம் நொச்சி இலை ஒரு கைப்புடி அளவு தழுதாழை (மூலிகை) 20 கிராம் தண்ணீர் 100 மி.லி செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பிறகு 100 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நீரை கொதிக்க வைக்க வேண்டும். மேலும் இதனுடன் சித்தா முட்டி வேர்,நொச்சி இலை மற்றும் தழுதாழை ஆகிய மூன்று பொருட்களையும் நீருடன் சேர்த்துகொண்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு 100 மி.லி நீரை 50 மி.லி வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கிடைத்த நீரை தினமும் குடித்து வந்தால் கழுத்து வலிக்கு கண்டிப்பாக நிரந்தர தீர்வு கிடைக்கும்.