
நடிகை, மாடல், தொலைக்காட்சி பிரபலம் என பன்முகங்களை கொண்டவர் யாஷிகா ஆனந்த். தனது 14 வயதிலேயே மாடலிங் செய்ய தொடங்கி விட்டார். 2016-ம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, மைனர் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி, கடமையை செய், பகீரா என பல படங்களில் நடித்தார். எனினும் சொல்லிக் கொள்ளும் படியாக எந்த பெரிய படத்திலும் அவர் நடிக்கவில்லை. அவர் கடைசியாக படிக்காத பக்கங்கள் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இவன் தான் உத்தமன், ராஜ பீமா, சல்ஃபர் உள்ளிட்ட படங்களில் யாஷிகா ஆனந்த் நடித்து வருகிறார்.
இந்நிலையில் யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக அவர் கிளாமர் போட்டோக்களை அதிகமாக பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் யாஷிகாவின் படு கிளாமரான போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.
View this post on Instagram