கவுதம சிகாமணி நேரில் ஆஜராக உத்தரவு..!!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் திமுக எம்.பி.யும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கவுதம சிகாமணி நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தில் 2006-11 வரை செம்மண் குவாரியில் அனுமதித்த அளவை விட அதிகமாக மண் எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை விசாரித்தது. இதில், கவுதம சிகாமணி உட்பட 6 பேருக்கு எதிராக 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதோடு, அவர்கள் நவம்பர் 24ஆம் தேதி நேரில் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read Previous

தீயணைப்புத் துறையினருக்கு தீபாவளி விடுமுறை இல்லை..!!

Read Next

இன்றைய பஞ்சாங்கம் (நவம்பர் 08)…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular