நம் முன்னோர்களால் பின்பற்றி வரும் அம்மாவாசை அன்று காகத்திற்கு உணவு வைப்பார்கள் காகம் என்பது இறந்து போன நம் முன்னோர்களாகவும் என்று நினைத்து அம்மாவாசை அன்று காகத்திற்கு உணவு வைப்பார்கள் மற்றும் பல விரதங்களிலும் படையல் இட்டு காகத்திற்கு உணவு இட்டு காகம் அந்த உணவை எடுத்த பிறகு வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுவார்கள் இது இன்றும் பல கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. காகம் என்றால் இறந்து போனவர்கள் நம்மை காண்பதற்காக இந்த பூலோகத்திற்கு திரும்பி காகம் என்ற ரூபத்தில் வருவார்கள் என்று கூறப்படுகிறது. இறந்த ஆத்மாக்கள் காகத்தின் ரூபத்தில் நம்முடைய வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலைகள் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு கட்டப்பட்ட தான் முன்னோர்களின் வழிபாட்டில் இந்த காகத்திற்கு ஒரு முக்கிய முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மற்றும் எமலோகத்தில் உள்ள எமனுக்கும் வாகனமாக இந்த காகம் இருப்பதாகவும் சில குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சனிபகவானுக்கு வாகனமாக இருப்பதும் இந்த காகம் தான். இந்நிலையில் இந்த காகத்திற்கு பல வகைகளில் நம் முன்னோர்களால் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட காகத்திற்கு சாதம் வைக்கும் போது நாம் செய்யக்கூடிய சில தவறுகள் என்னென்ன என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். காகத்திற்கு சாதம் வைக்கும் போது எச்சில் சாப்பாட்டை வைக்கக் கூடாது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். நான் சாப்பிட்டு மீதி இருக்கும் உணவை வீதியில் உள்ள நாய்களுக்கு வைக்கலாம் ஆனால் குறிப்பாக காகத்திற்கும் பசு மாட்டிற்கும் எச்சில் சாப்பாட்டை போடக்கூடாது. காகமும் பசு மாடும் எச்சரி இலைகள் இருந்து தானாகவே சாப்பிட்டால் அதன் மூலம் நமக்கு ஏதும் தோஷம் ஏற்படாது ஆனால் நம் கையால் அதை வைத்தால் அது மிகவும் தவறு. மேலும், உடலளவில் சுத்தம் இல்லாதவர்கள் காகத்திற்கு சாதம் வைக்கக்கூடாது குறிப்பாக பெண்கள் மாதவிடாய் சமயத்தில் காகத்திற்கு சாதம் வைக்காதீர்கள். அதுமட்டுமின்றி, கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இருந்துவிட்டு காலையில் தீட்டுடன் இருக்கும் போது சுத்தம் இல்லாத சமயத்தில் காகத்திற்கு சாதம் வைக்க கூடாது. அசைவ உணவுகளை நம்முடைய கைகளால் காகத்திற்கு வைக்கக் கூடாது. மேலும் வீட்டில் அசைவ உணவு சமைப்பதற்கு முன்பாகவே ஊறவைத்த அரிசி அல்லது பிஸ்கட் போன்ற பொருட்களை காகத்திற்கு சாப்பிட வைக்கலாம் காகம் இயற்கையாகவே புழு பூச்சிகளை உட்கொள்ளும். மேலும் இன்னும் கிராமப்புறங்களில் காகம் கத்தினால் நம் வீட்டிற்கு யாரோ உறவினர்கள் வருவார்கள் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. மேலும் காகம் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து கரைந்தால் அது நம்முடைய வீட்டிற்கு அதிகப்படியான சந்தோசத்தை கொடுக்கும் என்றும் கூறுகிறார்கள். தென்மேற்கு பகுதியில் இருந்து காகம் கரைந்தால் அது அதிகப்படியான பண வரவை கொடுக்கும் என்றும் கூறுகிறார்கள். தென் கிழக்கு ப் பகுதியில் காகம் கரைந்தால் பிரச்சனைகள் குறையும் எதிரிகள் கூட நண்பராக மாறும் சூழ்நிலை ஏற்படும். என்றும் மேற்கு பகுதியில் கரைந்தால் மழை வருவதற்கான அறிகுறி என்றும் இன்றும் பல கிராமப்புறங்களில் பெரியோர்கள் காகம் கரைவதை வைத்து கணித்து சொல்வார்கள். மேலும் வட மேற்கு மற்றும் வடக்கில் காகம் கரைந்தால் எதிர்பாராத நஷ்டத்தை ஏற்படுத்தும். என்றும் கிராமப்புறங்களில் உள்ள பெரியோர்கள் காகத்தை வைத்தே இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை தெளிவாக கூறுவார்கள்.




