காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வெற்றி..!! கருத்துக்கணிப்பில் திடுக்கிடும் தகவல்..!! பாஜக அதிர்ச்சி..!!

நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிந்ததை தொடர்ந்து தற்பொழுது இன்று இந்த தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்பட உள்ளது, இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகள் ஆன இந்தியா கூட்டணி கட்சியை வெற்றி பெறும் என்று தற்பொழுது கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இதனை கேட்ட பாஜகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவுகள் அனைத்தும் நிறைவு பெற்று இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளும் காத்துக் கொண்டுள்ளன. இரண்டு முறை ஆட்சி அமைத்த பாஜக மீண்டும் தனது பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமா.? அல்லது இரண்டு முறை தனது ஆட்சியை தவறவிட்ட காங்கிரஸ் இம்முறை வென்று தனது ஆட்சியை அமைக்குமா.? என்று பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி அரசியல் முதல் ஏற்பட்டுள்ளது.

இத்தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக வெற்றி அடையும் என பெரும்பாலான நிறுவனங்கள் கூறி வருகின்றது. இந்நிலையில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கும் என தேசபந்து நாளிதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உட்பட்ட பல்வேறு கட்சிகள் கூட்டணி கட்சிகளாக இணைந்து தேர்தலை சந்தித்த நிலையில் இந்திய கூட்டணிக்கு 255 முதல் 290 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

பாஜகவில் ஆன தலைமையிலான கூட்டணிக்கு 270 முதல் 241 தொகுதிகள் கிடைக்கும் இடமும் கூறப்படுகிறது. உத்திரபிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை பாஜக கூட்டணி கட்சிகள் 48 இடங்களிலும், இந்தியா கூட்டணி கட்சிகள் 34 இடங்களையும் கைப்பற்றலாம் என்றும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணி 20 முதல் 30 இடங்களை கைப்பற்றும் என்றும்,பாஜகவுக்கு 20 இடங்கள் கிடைக்கும் என்றும், கர்நாடகா மாநிலத்தில் பாஜக கூட்டணி 10 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 20 இடங்களையும் கைப்பற்றும் என்றும் கூறப்படுகிறது. 42 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் பாஜக 11 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Read Previous

திருமண விழாவிற்கு சென்ற உறவினர்களுக்கு நேர்ந்த விபரீதம்..!! பரிதாபமாக பறிபோன 13 உயிர்கள்..!!

Read Next

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி பாஜக புள்ளியின் உறவினர் மரணம்..!! கண்ணீரில் குடும்பத்தினர்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular