
- காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடக்கம். 4 மாணவ மாணவிகள் பங்கேற்பு.!
காஞ்சிபுரத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் எம்எல்ஏ எழிலரசன் ஆட்சியர் ஆர்த்தி தொடக்கம்.4 மாணவ மாணவிகள் பங்கேற்பு.காஞ்சிபுரத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை எம்எல்ஏ எழிலரசன் ஆட்சியர் ஆர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு மாநில அளவிலான பாரதியார் தின குடியரசு தின புதிய விளையாட்டு போட்டிகளான நீச்சல் வளைப்பந்து ஜுடோ போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் வரும் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று விளையாட்டு போட்டியை காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த போட்டிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதலிடங்களை பெற்ற 2818 மாணவர்களும் 1928 மாணவிகளும் என மொத்தம் 4746 பேர் கலந்து கொள்கின்றனர்.
இப்போட்டிகள் கீழ் கண்டவாறு நடைபெற உள்ளது.நீச்சல் போட்டி காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாணவர்கள் 1648 மாணவியர்கள் 881 என மொத்தம் 2529 விளையாட்டு வீரர்களும் ஜுடோ போட்டி காஞ்சிபுரம் செவிலிமேட்டி உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் 898 மாணவிகள் 769 என மொத்தம் காஞ்சிபுரம் இன்பண்ட் ஜிசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் 272 மாணவியர்கள் 278 என மொத்தம் 550 பேர் கலந்து கொள்கின்றனர்.இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலெட்சுமி யுவராஜ் முதன்மை கல்வி அலுவலர் (பொ) ராமன் மாவட்ட உடற்கல்வி அலுவலர் முத்துவேல் அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.