
காணாமல் போன instagram பிரபலம்…சூட்கேஸில் சடலமாக மீட்பு…அர்ஜெண்டினாவில் பரபரப்பு..!!
ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனாகரை சேர்ந்தவர் பெர்னாண்டோ பெரேஸ். இவர் கிரிப்டோ கரன்சி குறித்து தாக்கத்தை ஏற்படுத்தும் காணொளிகளை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். தானும் அதில் அதிக அளவில் சம்பாதித்துள்ளதாக தன்னுடைய ஆடம்பர வாழ்க்கையை வெளிக்காட்டி வந்தார். இவரை 9,20,000 பேர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு அர்ஜென்டினாவிற்கு சென்ற பெர்னாண்டோ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு இருந்துள்ளார். அப்போது அவர் திடீரென மாயமாகியுள்ளார். அவரை காணாததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் பியூனர்ஸ் நகரின் கால்பந்து மைதானம் ஒன்றில் சிவப்பு நிற சூட்கேஸ் சந்தேகமளிக்கும் வகையில் கிடந்துள்ளது.
இதை பார்த்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல் அதிகாரிகள் விரைந்து வந்து பெட்டியை சோதனை செய்தபோது அதில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட மனித உடல் இருந்துள்ளது.
அந்த உடலில் குத்தி இருந்த டாட்டூக்களை வைத்து அது பெர்னாண்டோ பெரேஸ் தான் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். அவர் கடைசியாக வெளியிட்ட குறிப்பில் கிரிப்டோ கரன்சி வீழ்ச்சியடைந்ததால் தான் அதிக பணத்தை இழந்து விட்டதாகவும், பர்ரா ப்ரோவா என்ற வன்முறைக் கூட்டத்தில் கடன் பெற்றுள்ளதாகவும் இதன் மூலம் தனக்கு ஏதேனும் நேர்ந்தால் யார் காரணம் என்பதை குறிப்பிட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.