காதலனுடன் சேர்ந்து பிறந்த குழந்தையை கொன்ற பெண்..!! அதிர்ச்சி தகவல்..!!
கேரள மாநிலத்தில் தனியார் மருத்துவமனைக்கு வயிற்று வலி என்று கூறி வந்த ஒரு பெண், குழந்தை பிரசவித்ததற்கான அறிகுறி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்ததில், கல்லூரியில் படித்த போது காதலித்த தாமஸ் ஜோசப் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் நெருங்கி பழகியதால் குழந்தை பிறந்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார். தாமஸ் ஜோசப் நண்பருடன் சேர்ந்து பச்சிளம் குழந்தையை மண்ணுக்குள் புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.