காதலன் தன்னுடன் இருக்க ஆசைப்பட்டு, போலி பலாத்கார புகார் கொடுத்த 19 வயது இளம்பெண்..!!

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் வசித்து வருகின்ற 19 வயதுடைய இளம் பெண் சம்பவ தினக்கன்று தனது ஆண் நம்பருக்கு போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்பொழுது “ஆட்டோவில் தான் கடற்கரைக்கு செல்லும் போது ஆட்டோ ஓட்டுனர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரது ஆட்டோவில் ஏறி பயணிக்கும் போதே தான் மயங்கி விட்டேன். எழுந்து பார்த்தபோது நான் அரை நிர்வாணமாக இருந்தேன்” என்றும் கூறி உள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் நண்பர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வற்புறுத்தி உள்ளார். பெண்ணும் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி 58 வயதுடைய ஆட்டோ ஓட்டுனரை கைது செய்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் அப்பாவி என்று கதற, உடனடியாக பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரிசோதனையில் ஆட்டோ ஓட்டுனர் நிரபராதி என்பது உறுதியாக்கப்பட்டது. பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது காதலர் தன்னை விட்டு செல்லாமல் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற ஆசையில் பொய் கூறியதாய் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிருப்தி அடைந்த அதிகாரிகள் தங்களின் மனக்குமுறலை கட்டுப்படுத்தி பெண்ணுக்கு கண்டனத்துடன் கூடிய அறிவுரையை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.

Read Previous

என்கவுண்டரில் காவலர் பலி..!! திருமணத்திற்காக காத்திருந்த பெற்றோர், இறுதிச்சடங்கு செய்த துயரம்.!!

Read Next

சூனியம் வைப்பதாக பெண் உயிருடன் எரித்துக்கொலை..!! கணவரை கட்டிப்போட்டு கண்முன் நடந்த கொடூரம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular