காதல் இல்லாத வாழ்வை மனிதனுக்கும் இல்லை மரம் செடி விலங்குகளுக்கும் இல்லை காதலால் தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது..
காதல் அழகான ஒன்று அதனை வார்த்தைகளால் ஒருபோதும் முழுமைப்படுத்த முடியாது உணர்வுகளால் மட்டுமே அதனை முழுமைப்படுத்த முடியும், அப்படிப்பட்ட காதல் உங்கள் வாழ்வில் கிடைத்தால் முதலில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள் ஒருவரை ஒருவர் ஆழமாக புரிந்து கொள்ளுங்கள் புரிதல் ஏற்பட்டால் அங்கு சண்டைகள் வருவதே குறைவுதான், சண்டைகள் இல்லாமல் பயணங்கள் தொடர்வதில்லை சண்டைகள் வந்தாலும் சமாதானத்திற்கு நீங்களே முந்துங்கள் உங்கள் வாழ்க்கை துணை இடமும் உங்கள் காதலியிடமும் விட்டுத்தந்து செல்லுங்கள் கோபத்தை விட்டு தாருங்கள் அன்பை அதிகம் தாருங்கள் பாசத்தை பரிசுகள் தருவதன் மூலம் காட்டுங்கள் ஒருநாள் உங்கள் அன்பு புரியும், மீண்டும் பிறக்கப் போவதில்லை ஆனால் இந்த ஒரு வாழ்வில் காதல்கள் மனதை விட்டு நீங்குவதும் இல்லை, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அன்பும் அன்னோனியமும் கூடும் பொழுது வாழ்க அழகாகவும் காதல் காலம் கடந்தும் வாழ்வதாகவும் இன்னும் நம்பப்படுகிறது, எத்தனையோ மகாகாதலர்கள் சேர்வதற்கு முன்பே மடிந்தனர் மண்ணில் மடிந்த காதலுக்கும் சேர்த்தே நீங்கள் உங்கள் காதலியை நேசியுங்கள் உங்கள் காதல் உங்களுக்கு ஒரு ஊக்கத்தை தரும் உந்துதலை தரும் வெற்றிக்கான வழி தரும்…!!