
காதலர் தினத்தன்று மட்டும் தான் நாம் காதலை கொண்டாட வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஆனாலும், உலகளவில் பிப்ரவரி.14ஆம் தேதி தான் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
பனிப்பொழிவு காரணமாக நீலகிரி ஓசூரில் பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு தாஜ்மகால் ரோஜா – ரூபாய் 350 முதல் ரூபாய் 450, பிங்க் ரக ரோஜா – ரூபாய் 250 முதல் ரூபாய் 400, ராக்ஸ்டார் ரோஜா – ரூபாய் 200 முதல் ரூபாய் 350, ரெட் ரோஸ் – ரூபாய் 300 முதல் ரூபாய் 500, மற்ற கலர் ரோஸ் – ரூபாய் 200 முதல் 400 ரூபாய் வரை விற்பனை ஆகி வருகிறது.