
காதலர் தினத்தன்று இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் வழியே உலகிற்கு பரீட்சியமான நாளாகி மாறிக் கொண்டு வருகிறது. காதலர் தினம் யாரெல்லாம் கொண்டாட வேண்டும் அது இன்று பெரிதாய் காதலிக்கும் நபர்களுக்காக மட்டும் தானா காதல் செய்யும் உரிமை அவர்களுக்கு மட்டும்தான் அப்படி எதுவும் வரைமுறைகள் எங்கும் இல்லை…
இளம் தலைமுறைகினர் ஏதாவது ஒரு வழியில் காதலை கொண்டாடிவிட்டு போகட்டுமே அதில் நம் கவனத்தை திருப்ப வேண்டாம் திருமணம் முடிந்து பத்து ஆண்டுகள் 15 ஆண்டுகள் இருபது முப்பது ஆண்டுகள் கடந்த தம்பதிகளும் காதலை கொண்டாடலாமே. குடும்பம் அலுவலகப் பணி குழந்தை பெற்றோர்களை தவிர்ப்பது என சதாகாலமும் ஓடிக்கொண்டே இருக்கும் என் வாழ்க்கையில் கொஞ்சமாவது காதலுக்காக நேரம் ஒதுக்குவது இன்றைய காலகட்டத்தில் அவசியமானதாகும். காதலை கொண்டாடுவது என்றால் உடனே திரைப்படங்களில் வருவது போல் செயற்கையான முறைகளில் இருக்க வேண்டும் என்று இல்லை ஒரு நாளில் இருக்கும் 24 மணி நேரத்தில் ஒரு ஐந்து நிமிட உரையாடல் சின்னதாக ஒரு குறுஞ்செய்தி ஒரு சிறிய பாராட்டு இவையெல்லாம் கூட காதல் தானே. மனைவியை வாரத்தில் ஒரு நாள் உட்கார வைத்து நான் சமைக்கிறேன் என சமையல் அறையை ஓய்வு அவளுக்கு அளித்தால் அதுவும் காதல் தானே. கணவனின் பைக் ரிப்பேர் ஆனால் தன் ஸ்கூட்டரில் மனைவியை அவனும் ஆபிசுக்கு டிராப் செய்வதும் காதல் தானே.அட இன்னைக்கு இவ்வளவு அழகா இருக்கீங்களே என ஒரு முறை உங்கள் கணவரிடம் சொல்லிப் பாருங்கள் இந்த எதிர்பாராத பாராட்டுக்கள் கண்டிப்பாக மகிழ்ந்து தான் போய் விடுவார்கள் அவர் எந்த வயசாக இருந்தால் என்ன உங்கள் கணவரை பாராட்டு உங்களைவிட மேலானவர் யார் இருக்கப் போகிறார்கள். மெனோபாஸ் காலத்தில் எத்தனை மனைவிமார்கள் மன அழுத்தத்தை கணவன் மீது காண்பித்திருப்பார்கள் அத்தனைக்கும் அமைதியாய் இருந்து ஆண்கள் பலர் வாழ்க்கையை கடந்து போகவில்லையா காதல் இருந்தால் வெளியே இது சாத்தியம் இல்லையே திருமணமான பொழுதில் மனைவி சமைத்த உணவை சுமாராக இருந்தாலும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பதில் காதல் கண்டிப்பாக இருக்கும் தான் என்ன வேண்டுமானாலும் குறை கூறலாம் ஆனால் தன் துணையை யாராவது குறை கூறினால் கோபம் பொத்துக் கொண்டு வருமே அங்கே இருப்பது காதல் இப்படி காதலை அடுக்கிக்கொண்டு போகலாம். உங்கள் காதலர்களையும் காதலையும் ஊக்கப்படுத்தி மதிப்பளித்து நேரத்தை செலவிடுவதன் மூலம் உங்கள் காதல் வாழ்வு அழகாகுமே..!!