காதலியின் கண்முன் காதலனை துள்ளத்துடிக்க கொலை செய்த கும்பல்..!! நெல்லையில் பகீர் சம்பவம்.!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியை சார்ந்தவர் தீபக் ராஜா. இவர் சம்பவ தினத்தன்று அங்குள்ள கேடிசி நகரில் இருக்கும் தனியார் ஹோட்டல் முன் பெண் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

அச்சமயம் அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று தீபக் ராஜாவை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பின் தீபக் ராஜாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் தீபக் ராஜா தனது காதலியுடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் அவரது கண் முன்னே இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றது என்பது உறுதி செய்யப்பட்டது. இருவரும் வரும் ஜூன் மாதம் இரண்டாம் தேதி திருமணம் செய்ய உள்ள நிலையில் தற்போது சந்தித்து பேசிக்கொண்ட போது கொலை சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த அதிர்ச்சிகர சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் அதே வேளையில் கொலை சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.

Read Previous

குடும்ப பிரச்சனையில் நடந்த கொடூரம்..!! வீடுபுகுந்து அரங்கேறிய படுகொலை சம்பவம்.!!

Read Next

85 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!! 57 வயது மதுபோதை ஆசாமி அதிர்ச்சி செயல்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular