கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தங்களை பகுதிக்கு அருகில் அருகில் பெண் ஒருவர் தன்னுடைய மூன்று குழந்தைகள் மற்றும் காதல் கணவனை கைவிட்டு 15 சவரன் நகை மற்றும் ரொக்கம் 18 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவாக சென்றுள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நிஷா என்ற பெண் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விபின் என்பவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களில் திருமணத்திற்கு அடையாளமாய் மூன்று குழந்தைகள் உள்ளனர், விபின் அதிகப்படியான கடன் சுமை தாங்காமல் தவித்துக் கொண்டுள்ளார். எனவே அவர்களது வீட்டை விட்டு விபின் 18 லட்சம் பணம் திரட்டி வைத்தார்.
கடனை அடைப்பதற்காக அந்த பணத்தை அவர் திரட்டி வைத்த நிலையில் மனைவி நிஷா அந்த பணத்தை யாரிடமும் சொல்லாமல் எடுத்துக்கொண்டு 15 சவரன் தங்க நகைகளுடன் மாயமானார். இதனை தொடர்ந்து கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் நிஷாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.