
சத்தீஸ்கரில் காதல் ஜோடி ஒன்று பைக்கில் சில்மிஷம் செய்துகொண்டே சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இளைஞர் பைக் ஓட்டிக்கொண்டிருக்க, அருகில் அமர்ந்திருக்கும் பெண் அவரை கொஞ்சியபடியே வருகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர். பின் அந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த பைக் உத்தரபிரதேசத்தில் இருந்து காணமல்போன பைக் என்றும் தெரியவந்துள்ளது.