
காதல் திருமணங்களில் பெற்றோர்களின் கையெழுத்து கட்டாயமாக வேண்டும் என்று குஜராத் சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குஜராத் சட்டப்பேரவையில் சட்டத்துறை மீதான விவாதத்தின் மீது காதல் திருமணங்களில் பெற்றோரின் கையெழுத்தை கட்டாயமாக்கும் சட்ட திருத்தத்தை அரசு கொண்டுவர வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ கலோல் பாதேசின் கோரிக்கை வைத்துள்ளார். பெற்றோரின் அனுமதி இல்லாமல் நடக்கும் திருமணங்கள் மாநிலத்தில் குற்றத்தை அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் பெற்றோர் சம்பந்தத்துடன் பதிவு திருமணம் நடந்தால் குறைந்த விகிதம் 50 சதவீதம் விவாகரத்து குறையும் என்றும் நீதிமன்ற திருமணங்கள் அந்தந்த பகுதிகளில் பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் ஆவணங்களை மறைத்து வெவ்வேறு மாவட்டங்களில் திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால் பெண்களும் அவரது பெற்றோர்களும் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். இதனால் தற்கொலை சம்பவங்கள் அதிகமாய் நடைபெற்று வருகின்றது. வேலையில் பிஸியாக இருக்கும் பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள முடியவில்லை. எனவே இதனை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பெண்களை ஏமாற்றி வருகின்றனர்.
எனவே காதல் திருமணங்களில் பெற்றோரின் கையொப்பத்தை கட்டாயமாக்கும் சட்ட திருத்தத்தை அரசு கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ஜெனி தத்குவோம் கோரிக்கை வைத்துள்ளார். அதே போல் பல எம்எல்ஏக்கள் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.