காதல் திருமணம் செய்து மாமியாரை கொன்ற இளைஞர்; 30 ஆண்டுகள் கழித்து கைதான குற்றவாளி.!!குடும்பமே அதிர்ச்சி.!!

ஒடிசா மாநிலத்தை சார்ந்த ஹரிபட்டா ஜோசி (வயது 54) இவ்வாறு கடந்த 1993 ஆம் ஆண்டு கிண்டியில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தில் சமையல் ஆளாக வேலைக்கு சேர்ந்தார். அங்கு வேலை பார்த்து வந்த ஆதாம் பாக்கம் நகர் பகுதியை சார்ந்த ரமா என்பவரின் மகள் இந்திராவை காதலித்து உள்ளார்.

இந்த உண்மையை அறிந்த ரமா தனது மகளை 1994ல் திருமணம் செய்து கொடுத்தார். இருவரும் ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனியாய் வசித்து இருந்த நிலையில் மொழி பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்திராவை கணவர் ஜோசி சித்திரவதை செய்து வருவதாகவும் கூறப்பட்டது. இதை தொடர்ந்து இந்திரா திருமணம் முடிந்த 15 நாட்களிலேயே கணவரை பிரிந்து தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமான ஜோசி 1995 ஆம் ஆண்டு மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை குடித்தனம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு இந்திரா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது மாமியார் ரமாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். மேலும் இந்திராவின் சகோதரர் கார்த்திக்கின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆதம்பாக்கம் காவல்துறையினர் ஜோசியை தேடி நிலையில் அவர் தனது ஒடிசா மாநிலத்திற்கு தப்பி சென்றார்,

1996 ஆம் ஆண்டு முதல் 2006 வரை அவரை காவல்துறையினர் கைது செய்ய இலவில்லை. அவர் எங்கு உள்ளார் என்றும் தெரியவில்லை. இதனால் 28 ஆண்டுகளாக வழக்கு கிடப்பில் இருந்த நிலையில் தற்போது தனிப்படை காவல்துறையினர் அமைக்கப்பட்டு குற்றவாளி தீவிரமாக தேடப்பட்டு வந்தார், இந்நிலையில் ஹரிப்பட்டார் ஜோசியை தேடி ஒடிசா சென்ற தனிப்படை காவல்துறையினர் கஞ்சம் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக முகாமிட்டு விக்ரம்பூர் பகுதியில் அவரை கைது செய்தனர்.

தற்பொழுது அவருக்கு 54 வயதாகிறது, அவர் கொலை செய்து சில ஆண்டுகள் சொந்த ஊருக்கு செல்லாமல் இருந்த நிலையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். காவல்துறையினர் கைது செய்த பின் தான் தனது கணவர் ஏற்கனவே திருமணம் ஆகிருப்பது அந்த பெண்ணிற்கு தெரியவந்தது.

தனிப்படை காவல்துறையினருக்கு கஞ்சம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் புதுச்சேரி மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சரவணன் விவேக் உதவி செய்ததை அடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

Read Previous

அரசு மருத்துவமனையில் மருத்துவராக நடித்து குழந்தைக்கு பேரம் பேசிய பெண்..!! விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்.!!

Read Next

தின்னரில் 2 மகள்களுக்கு எலிபேஸ்ட் கலந்துகொடுத்த தாய்..!! தானும் தற்கொலை முயற்சி..!! 4 வயது மகள் பலி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular