
திருப்பூர்: காதல் திருமணம் செய்து கொண்ட செல்வராஜ், அபிநயா தம்பதி ஆர்.கிருஷ்ணாபுரத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில், அபிநயா நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு தனது 2 குழந்தைகளுடன் வந்த செல்வராஜ் மனமுடைந்து, மருத்துவமனை மின்மோட்டார் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.