
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் இனியவன் (33) என்பவரும், தனியார் வங்கி ஊழியரான சவுமியா (31) என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில், தம்பதிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று முன்தினம் இரவு சவுமியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்த இனியவர், மருந்து இல்லாத வெற்று ஊசியை தனது உடலில் செலுத்தி தற்கொலைக்கு முயன்று, தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.