“காந்தியடிகள் காவலர் விருது” மற்றும் பரிசுத்தொகை அறிவிப்பு..!!
மது விலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025ம் ஆண்டு குடியரசு தினத்தன்று 5 பேருக்கும் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார். காந்தியடிகள் காவலர் விருதுடன் பரிசுத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.40,000 வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.