
இன்று கல்விக்கண் திறந்த காமராஜரின் பிறந்தநாள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இவரது பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காமராஜர் பிறந்த நாள் பல்வேறு பள்ளிக்கூடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் பள்ளிகளில் கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி,ஓவிய போட்டி, கவிதை போட்டி,பாட்டு போட்டி என்று பல விதமான போட்டிகள் நடைபெறும்.இதெல்லாம் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. போட்டிகள் பள்ளிகளில் நடக்கவேண்டும் என்பது தமிழக அரசு போட்ட உத்தரவு.
இதனை அடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,இந்தியாவில் காமராஜரை போன்று ஒரு முதலமைச்சர் இல்லை, தமிழகத்தில் நிச்சயமாக இல்லை என்று சொல்லும் அளவிற்கு காமராஜர் ஐயாவின் ஆட்சி அமைந்து இருந்தது என்று தெரிவித்துள்ளார்.