நாம் அன்றாட உணவிற்கு பயன்படுத்தும் காய்கறிகளில் இருந்து முழு சத்துக்களையும் பெறுவதற்கு இதனை செய்யுங்கள், இதனை செய்வதன் மூலம் காய்கறிகளில் இருந்து சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கிறது…
எந்த காய்கறியாக இருந்தாலும் அந்த காய்கறிகளை சமைக்கும் பொழுது அதிக எண்ணெய் மற்றும் உப்பு இவற்றை பயன்படுத்தக் கூடாது, இதனை மீறி நாம் என்னையோ அல்லது உப்பையோ சேர்த்து சமைக்கும் பொழுது வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி இதிலிருந்து விலகுகிறது மேலும் உப்பு சத்துக்களை உடலுக்கு கூட்டி தருகிறது, காய்கறிகளை நீண்ட நாட்கள் பிரிட்ஜுக்குள் சேகரித்து வைப்பதன் மூலம் காய்கறிக்குள் இருக்கும் சத்துக்கள் விலகி விடுகிறது மேலும் அதனை எடுத்து சமைக்கும் பொழுது நோய்கள் நம் உடலை தாக்குகிறது, எந்த ஒரு காய்கறிகளையும் நன்றாக கழுவிய பிறகு அதனை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும், சிறிது சிறிதாக வெட்டப்படும் காய்கறிகள் உடனே பாக்டீரியாக்களால் தாக்கப்படும் இதனால் வெட்டிய அல்லது நறுக்கிய காய்கறிகளை உடனே சமைத்துக் கொள்ள வேண்டும் இதன் மூலம் நேரடியாக உடலுக்கு தேவையான சத்துக்களை காய்கறி வருகிறது..!!