தேவையான பொருள்: வேப்பம் பட்டை 100 கிராம் சீரகம் தூள் 20 கிராம் பால் 100 மி.லி செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு 100 கிராம் வேப்பம் பட்டை நன்கு இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் நன்கு கொதிக்க விட வேண்டும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் ஒரு தேக்கரண்டி வேப்பம் பட்டை பொடி மற்றும் சீரகம் பொடி ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும். இதனை தினந்தோறும் பருகி வந்தால் உடலில் ஏற்படும் காய்ச்சல் அறவே நீங்கும்.