
- நாட்டுக்கோழி வறுவல்
தேவையானவை:
கோழி- ஒரு கிலோ
இஞ்சி- சிறிது
பூண்டு- முழுதாக ஒன்று
எலுமிச்சைரசம்- இரண்டு மேசைக்கரண்டி
காய்ந்தமிளகாய்- இருபது
தனியா- ஒரு மேசைக்கரண்டி
மிளகு- ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள்- ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய்- ஒரு கோப்பை
உப்புத்தூள்- இரண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
1.முதலில் சுத்தம் செய்த கோழியை துண்டுகளாக வெட்டிக்கொளவும்.பிறகு அரைத்டேபிள் ஸ்பூன் மஞ்சத்தூள்,உப்புத்தூள்போட்டு ஒரு கப் நீரை ஊற்றி அரை அவியலாகவேகவைத்துக் கொள்ளவும்.பிறகு மீதியுள்ள பொருட்களை எலுமிச்சைரசத்தை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
2.பிறகு அரைத்த விழுதுடன் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெயை சேர்த்து நன்குகலக்கி கொண்டு கோழித்துண்டுகளின் மீது பூசவும்.
3.இந்த கலவையை 2 மணி நேரத்திற்க்கு ஊறவைக்கவும்.பிறகு ஒரு வாணலியில்எண்ணெய்யை ஊற்றி நன்கு காயவைக்கவும்.நன்கு காய்ந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஊறிய கோழித்துண்டுகளை போட்டு பொன்முருவலாக பொரித்து எடுக்கவும்.