காரசாரமான பெப்பர் சிக்கன் வறுவல் எப்படி செய்யலாம்?.. ரெசிபி இதோ..!!

சிக்கனை வைத்து நாம் எல்லோரும் பல வகையான ரெசிபிகளை செய்திருப்போம். இதுவும் ஏன் சிலருக்கு சிக்கனை வைத்து செய்ய தெரியாத உணவுகளே இருக்காது.

அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் பார்க்க போகும் ரெசிபி பெப்பர் சிக்கன் வறுவல் எப்படி செய்யலாம் என்பது தான். இந்த பதிவில் அதை விரிவாக பார்கலாம்.

தேவையான பொருட்கள்

  • சிக்கன் – 1/2 கிலோ
  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • பட்டை – 2
  • கிராம்பு – 3
  • ஏலக்காய் – 3
  • மராட்டி மொக்கு -1
  • அன்னாசி பூ -1
  • கல்பாசி – சிறிதளவு
  • வரமிளகாய் – 4
  • தனியா – 2ஸ்பூன்
  • மிளகு – 1 ஸ்பூன்
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • முந்திரி – 10
  • பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
  • கசகசா – 1 ஸ்பூன்
  • துருவிய தேங்காய் – 5 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம் சிறிதளவு சேர்த்து, கருவேப்பிலை போட்டு, வர மிளகாயை கிள்ளி போடவும்.

இதனுடன் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். இவை நன்றாக வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து உப்பு சேர்க்க வேண்டும்.

இதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் சிக்கனை சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் பெப்பர் பொடி சேர்த்து தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்க வேண்டும். இதன் பின்னர் 20 நிமிடம் மூடி வைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பெப்பர் சிக்கன் வறுவல் தயார்.

Read Previous

மகளை பார்க்க மனைவி அனுமதிக்காததால் டாக்டர் தற்கொலை..!!

Read Next

இந்த பொருட்களை கடனாக கொடுக்கவே கூடாது..!! மீறினால் வறுமை ஏற்படும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular