
குழந்தைகளுக்கு முள்ளங்கி என்பது பிடிக்காத ஒன்றாய் உள்ளது, அதை நன்றாக சுவையில் காரசாரமாய் சமைத்து குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்கள் அதனை உட்கொள்வார்கள். அந்த காரசாரமான முள்ளங்கி வருவல் செய்வது எவ்வாறு என்பது குறித்து இப்ப பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்
- முள்ளங்கி
- இஞ்சி, பூண்டு விழுது
- மஞ்சள் தூள்
- நல்லெண்ணெய்
- சோம்பு
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- கருவேப்பிலை,
- கரம் மசாலா
- மிளகாய்த்தூள்
- உப்பு
- கொத்தமல்லி
செய்முறை
முதலில் முள்ளங்கியின் தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் நறுக்கி வைத்துள்ள முள்ளங்கி சேர்த்து மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக எண்ணெய் சூடேறியதும் அதில் சோம்பு ,கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும், நறுக்கி வைத்த வெங்காயம் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்,
தக்காளி வெங்காயம் நன்றாக வதங்கியதும் கரம் மசாலா, மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும், எண்ணெய் தனியாக பிரிந்து வந்ததும் வேக வைத்துள்ள முள்ளங்கியை சேர்த்து 10 நிமிடங்கள் கலந்து விடவும், பிறகு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி வருவல் தயார்.