
- காரமல் பனானா வித் ஐஸ்கிரீம் செய்முறை
தேவையான பொருட்கள் :
* வாழைப்பழம் 2 (நறுக்கியது)
* சர்க்கரை 5 தேக்கரண்டி
* வெண்ணெய் 3 தேக்கரண்டி
* ஐஸ்கிரீம் விருப்பமான வகைகளில் ஒன்று
* ஜெல்லி 8 துண்டுகள்
செய்முறை :
காரமல் பனானா வித் ஐஸ்கீரிம் செய்வதற்கு முதலில் கடாயில் வெண்ணெய் விட்டு வாழைப்பழத்தை பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின் காரமல் செய்ய சர்க்கரையை வெண்ணெயில் லேசாக வறுத்து வாழைப் பழத்தின் மேல் ஊற்ற வேண்டும்.அதில் பால், உப்பு, வாழைப்பழ மசியல், எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனை குளிர்ப் படுத்தவும். இதில் முட்டை வெள்ளை க்கரு, வெண்ணிலா எஸ்ஸென்ஸ், மற்றும் கிரீம் சேர்த்து கலக்கவும்.
பிறகு பரிமாறும் போது 2 காரமல் வாழைப்பழம், அதன் மேல் 3 ஜெல்லி, அதன் மேல் ஐஸ்கீரிம், அதன் மேல் 3 காரமல் வாழைப்பழம், அதன் மேல் 5 ஜெல்லி வைத்து சாப்பிட வேண்டும். சுவையான காரமல் பனானா வித் ஐஸ்கிரீம் தயாராகி விட்டது.