காரிய தடைகள் நீக்கும் வழிபாடு..!! எப்படி எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?..

நாம் ஒரு காரியத்தை நினைத்து அதில் இறங்குவோம். அது தொழில் வாழ்க்கையில் ஒரு முடிவு எதுவாக இருந்தாலும் அது நடக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் சிலருக்கு எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடை தாமதம் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இதனால் விரத்தியும் மனசோர்வும் அடைவர். அப்படிப்பட்டவர்களுக்கு காரியத்தடை விலக என்ன செய்யலாம் என்பதை பற்றி இனி காண்போம்.

காரியத்தடை நீங்கி நினைத்த காரியம் நிறைவேற விநாயகரை எளிய முறையில் வழிபட்டாலே தடைகள் அனைத்தும் நீங்கிவிடும். எந்த ஒரு காரியமும் நடக்க வேண்டும் என்றால் முதலில் குலதெய்வத்தையும் பிறகு விநாயகரையும் வணங்கிவிட்டு தான் துவங்க வேண்டும் என முன்னோர்கள் சொல்வார்கள். ஆனாலும் ஏதோ ஒரு காரணத்தினால் தொடர்ந்து தடைகள் ஏற்பட்டே கொண்டிருந்தால் இந்த முறையில் விநாயகரை வழிபட்டால் உங்கள் காரியத்தின் தடைகள் விலகிவிடும்.

சனிக்கிழமை நாளில் சூரியன் மறைவதற்கு முன்பாக 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு ஆறு அகல்விளக்குகளில் சுத்தமான பசுநெய் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தின் ஒவ்வொரு விளக்கிலும் ஒரே ஒரு குங்குமப்பூ இதழை போட வேண்டும். நெய்யுடன் குங்குமப்பூவும் சேர்த்து எரிய விட வேண்டும். அப்படி எரியும் போது வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கி நன்மைகள் பெருகும். இந்த விளக்கு பரிகாரத்தை தொடர்ந்து ஆறு வாரங்கள் செய்ய வேண்டும்.

தொடர்ந்து தாடைகளை சந்தித்து வருபவர்கள் அவ்வையார் அருளிய விநாயகர் அகவலை 48 நாட்கள் படித்து வரலாம். விநாயகர் துதியையும் படித்து வரலாம். விநாயகருக்கு உரிய ‘ஓம் ஸ்ரீ கணேசாய நம’, ‘ஓம் சக்தி விநாயக நம’ என்ற மந்திரங்களில் ஏதாவது ஒன்றை தினமும் 108 முறை காலையில் சொல்லிவிட்டு பணிகளை துவங்கலாம்.

இது மட்டுமில்லாமல் சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி 12 முறை வலம் வந்து வழிபடலாம். வெளியில் ஒரு காரியமாக கிளம்பும்போது பெருமாளின் நாமமான கேசவா மந்திரத்தை ஏழுமுறை சொல்லிவிட்டு வெளியில் கிளம்பினாலும் செல்லும் காரியம் தடை இன்றி வெற்றிகரமாக நிறைவடையும். இதுபோன்று எளிமையான பரிகாரங்களை செய்வதன் மூலம் நாம் நினைத்த காரியம் நிறைவேறி நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.

Read Previous

ஒரே நாடு ஒரே தேர்தல்.. கடுமையாக எதிர்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! விவரம் உள்ளே..!!

Read Next

வல்லமை தரும் வல்லாரைக் கீரையில் இப்படி துவையல் அரைத்துப் பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular