கார்த்திகை தீபம்: 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு பொதுமக்கள், பக்தர்களின் வசதிக்காக 2,700 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த பேருந்துகள் அனைத்தும் நவ. 25ம் தேதி முதல் நவ.27ம் தேதி வரை இயக்கப்பட இருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read Previous

மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிய உத்தரவு..!!

Read Next

கிறிஸ்தவர் உடலை புதைக்க பாஜகவினர் எதிர்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular