ஜெர்மனியைச் சார்ந்த தத்துவஞானி, பொருளாதார வல்லுநர், சமூகவியலாளர், முதன் முதலில் பொதுவுடைமைக் கொள்கையை முன் வைத்தவர் மாமேதை கார்ல் மார்க்ஸ்.
கார்ல் மார்க்ஸ் பொன் மொழிகள்.
1. ஒரு சமூகத்தின் பெண்களின் நிலை கொண்டே அந்த
சமூகத்தின் தரம் மதிப்பிடப்படும்.
2. என்றும் நினைவில் கொள்! மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.
3. உழைப்பு தான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்புகளுக்கும் மூலதனம்.
4 வரலாற்றின் போக்கை தீர்மானிப்பதில் பணம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.
5. அன்புமிக்க பெண்ணிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மேலும் மேலும் மனிதனாக்கும்.
6.எல்லாவற்றிற்கும் காரணங்கள் எப்போதும் இருக்கின்றது, ஆனால், நியாயமானதாக இருப்பதில்லை!
7. தத்துவ வாதிகள் உலகை விளக்குவதில் நேரத்தை செலவிட்டனர். ஆனால், உலகை விளக்குவது அல்ல, அதை மாற்றுவதே நமது இலக்கு.
8. ‘மதம் என்பது ஒடுக்கப்பட்ட உயிரினத்தின் பெருமூச்சு, இதயமற்ற உலகின் இதயம் , ஆன்மா இல்லாத நிலைமைகளின் ஆன்மா.’
9. நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது.
10. பிரச்சனைகளின் வீரியம் அதிகரிக்கும்போது தான், அதிலிருந்து வெளிவருவதற்கான எளிமையான வழிகள் நம் கண்களுக்குத் தெரிய தொடங்கும்.
11. அது அவன் பணம்தான். ஆனால், அதை அவனால் உண்ண முடியாது.