
காலணி அணியாமல் வெறும் காலில் நடைப்பயிற்சி செய்வதால் இவ்வளவு நன்மைகளா..??
தினமும் நடைப்பயிற்சி செய்வது உடலுக்கு பல நன்மைகளை தரும். மற்றும் ஆரோக்கியமான செயலும் கூட. ஆனால் வெறும் காலில் மண்ணில் நடப்பது இன்னும் கூடுதல் நன்மைகளை தரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. காலணி அணியாமல் வெறும் காலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வெறும் காலில் நடை பயிற்சி செய்வதால் பாது தசைகள் பலப்படும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும். கால் வலி மூட்டு கால் வலி கணுகால் வலி போன்றவை மண்ணில் நடப்பதால் அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்பட்டு வழி குறைந்து உடல் ஆரோக்கியம் கிடைக்கும். அதுமட்டுமின்றி இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களும் வெறும் காலில் நடை பயிற்சி மேற்கொண்டால் ஆழ்ந்த உறக்கம் நிம்மதியான உறக்கம் கிடைக்கும். மன அழுத்தம் இருப்பவர்களும் இவ்வாறு வெறும் காலில் நடப்பதன் மூலம் மன அழுத்தம் குறைந்து மனநிலை மாற்றம் நிகழும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக எடை போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். தினமும் அரை மணி நேரம் வெறும் காலில் மண்ணில் நடப்பது உடலுக்கு இயற்கையான முறையில் அதிக அளவு நன்மைகளை தருகிறது.