
காலத்தால் மறந்தவை..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே ஒரு சில விஷயங்கள் எல்லாம் கடைப்பிடித்து வந்தனர். ஆனால் காலம் காலமாக கடைப்பிடித்து வந்த வழக்கங்கள் எல்லாம் இந்த காலத்தில் அனைவரும் பின்பற்ற மறந்து விட்டோம் என்பதே உண்மை. இந்நிலையில் காலத்தால் மறந்தவை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒருவரை பார்க்கும் பொழுது இரு கை கூப்பி வணக்கம் சொல்லியது. மற்றும் வீட்டிற்குள் நுழையும் முன் கை கால்களை நன்றாக கழுவி விட்டு பிறகு வீட்டிற்குள் வருவது. மஞ்சள் நீராடி விளையாடுவது. மற்றும் சாம்பல் உப்பு கொண்டு பல் துலக்கியது. குறிப்பாக மாட்டுச்சாணம் கழித்து வாசல் பெருக்கியது என பலவற்றையும் நாம் மறந்து விட்டோம்.
அதுமட்டுமின்றி மாட்டுச்சாணம் கொண்டு வாசல் தெளிப்பதோடு மட்டுமா வீட்டின் தரையையும் ஒழுகுவார்கள் மற்றும் மாட்டு சாணம் கொண்டு பிள்ளையார் வைப்பார்கள் அதை இப்பொழுது யார் யார் வீட்டில் செய்கிறோம் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். வருடம் ஒருமுறை வீட்டிற்கு வெள்ளை அடிப்பது மற்றும் மாலை நேரம் வீட்டில் சாம்பிராணி இயற்றி புகை போட்டது பெரிய காரியம் மற்றும் நெரிசல் மிக்க இடங்களில் இருந்து திரும்ப ஏதும் உடைகளை கழற்றி வீட்டிற்குள் வெளியே வைத்து நன்றாக குளித்துவிட்டு வீட்டில் நுழைந்தது போன்றவை எல்லாம் காலங்களால் மறக்கப்பட்டது.