
இன்றைய வேகமான உலகில் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை இலக்குகளை அடைவதற்கு பயனுள்ள நேரம் மேலாண்மை அவசியம். பலர் wis list எனப்படும் விருப்பப்பட்டியர்களை உருவாக்குகின்றன ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில் சில சிக்கல்கள் உள்ளன. ஆனால் டைம் பிளானிங் எனப்படும் நேரத்தை தடுக்கும் நுட்பம் பற்றி தெரிந்து கொண்டால் முன்னேற்றத்திற்கும் இலக்குகளை அடைவதற்கும் தேவையான நேரத்தை செலவிடும் உத்திகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நேரத்தை தடுப்பது என்றால் என்ன : நேரத்தை தடுப்பது என்பது ஒரு நேர மேலாண்மை முறையாகும் தினசரியோ அல்லது ஒரு வாரம் முழுவதுமோ பணிகள் அல்லது செயல்பாடுகளுக்கு ஏற்ப ஒரு அட்டவணையை உருவாக்கி குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் வேறு எந்த பணிகளும் செய்யாமல் அட்டவணையில் குறிப்பிட்ட பணிகளை மட்டுமே செய்ய வேண்டும் அந்த நேரத்தை அதற்காகவே தடுத்து அந்த செயலை செய்ய வேண்டும் இதுவே டைம் பிளானிங் அல்லது நேரத்தை தடுப்பது என்று பொருள்..
விஸ் லிஸ்ட் எனப்படும் விருப்ப பட்டியல்கள் ஏன் பெரும்பாலும் தோல்வி அடைகின்றன : ஒரு காகிதத்தில் இன்று செய்ய வேண்டிய வேலைகளை ஒரு பட்டியல் போட்டு வைத்துக்கொண்டு செய்ய ஆரம்பித்தால் அதில் குறிப்பிட்டுள்ள பத்து வேலைகளில் நான்கு ஐந்து மட்டும் தான் செய்வோம்.மீதி உள்ளவை செய்யப்படாமல் இருக்கும் ஏனென்றால் அதில் தெளிவான வரையறை இல்லாததே காரணம் வேறு வேலைகள் வரும்போது இந்த பட்டியலில் எழுதப்பட்டுள்ள வேலைகள் முக்கியமானவைகளாக தோன்றாமல் அவற்றை அப்படியே செய்யாமல் விட்டு விடுவோம்..
நேரத்தை தடுக்கும் முறைகள் : விருப்பபட்டியர்களுக்கு மாறாக டைம் பிளானிங் எனப்படும் நேரத்தை தடுக்கும் புத்தி நன்றாக பலன் தரும். ஒரு காகிதம் அல்லது நோட்டில் அன்று செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட வேண்டும் அதற்கான நேரத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும் எடுத்துக்காட்டாக காலை ஆறு டு ஏழு மணி முதல் நடை பயிற்சி மேற்கொள்ளவும் தியானம் செய்யவும் புத்தக வாசிக்கவும் இப்படி உங்கள் திட்டங்களை அதில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் அந்த நேரத்தை அதற்காகவே தடுத்து எந்த இடர்பாடுகள் வந்தாலும் அதை செய்து முடிக்க வேண்டும்…
மேம்படுத்தப்பட்ட முன்னுரிமை : ஒவ்வொரு பணிக்கும் நேரத்தை ஒதுக்குவதன் மூலம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒருவர் உணர்வுபூர்வமாக மதிப்பிடுகிறார். இது முதலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் செயலில் கவனம் செலுத்த உதவுகிறது ஒரு நேரத்தில் ஒரு பணியில் கவனம் செலுத்த முடிகிறது. மல்டி டாஸ்கிங் வாய்ப்புகளை குறைக்கிறது..
தெளிவான மற்றும் அடையக்கூடிய இலக்குகள் : நேரத்தை தடுப்பது என்பது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எதை சாதிக்க வேண்டும் என்பதை வரையறுத்து தெளிவான செயல்படக்கூடிய இலக்குகளுக்கு வழிவகுக்கும் எடுத்துக்காட்டாக விளக்கு காட்சியை தயார் செய் என்று எழுதுவதற்கு பதிலாக விளக்கக் காட்சியை தயார் செய் என்று ஸ்லைடுகள் உருவாக்கி திருத்துவதற்கு ஒரு நபர் காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை தடுக்கலாம்..
அர்ப்பணிப்பு விழிப்புணர்வு : பணிகளை செயல்படுவதற்கான அர்ப்பணிப்பை உருவாக்குகிறது. நேரத்தை தடுப்பது அதிக நிகழ்வுத்தன்மையை அனுமதிக்கிறது ஒரு பணி எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டாலோ அல்லது புதிய பணிகள் ஏற்பட்டாலும் அட்டவணையை எளிதாக சரி செய்ய முடியும்..!!