காலாவதியான பொருட்களை கவனிக்காமல் சாப்பிட்டால் என்ன நடக்கும்..? கடைகளில் வாங்கும் பொருட்களில் கவனம்.!!

தற்பொழுது உள்ள நவீன காலகட்டத்தில் நாம் பெரும்பாலும் பொருட்களை கடைகளில் வாங்கி வருகின்றோம். ஆனால் அப்பொருள்களின் காலாவதி தேதியினை என்றாவது நாம் கவனித்திருப்போமா..? கவனிக்காவிட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து இப்ப பதிவில் காணலாம்.

நாம் தினமும் சாப்பிடும் உணவுப் பொருட்களுக்கு காலாவதி நேரம் என்பது உள்ளது. வீட்டில் சமைக்கப்படும் பொருளாக இருந்தாலும் சரி, கடைகளில் வாங்கப்படும் பொருளாக இருந்தாலும் சரி அதற்காக இருக்கும் காலாவதி நேரம் முடிந்து விடும் பட்சத்தில் அது சாப்பிட தகுதி  இல்லாததுதான். இதனை கட்டாயப்படுத்தியோ அல்லது பிற காரணங்களுக்காகவோ சாப்பிடும் பட்சத்தில் கட்டாயம் அது உடல் சார்ந்த விளைவுகளை எதிர் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் காலாவதியான பொருட்களை சாப்பிடுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவையும் ஏற்படும். சில நேரம் இது உயிரிழப்பிற்கும் வழிவகை செய்யும் என்பதை நான் நம் நினைவில் கொள்ள வேண்டும். காலாவதியான பொருட்களை உருவாகும் பாக்டீரியா மற்றும் வைரஸ், பூஞ்சை போன்றவைகள் நமது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளையும் ஏற்படுத்துகின்றன. இதனால் காலாவதி தேதியை நாம் கவனிக்க வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும்.

Read Previous

நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா.? அப்படின்னா இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!!

Read Next

பிஸ்கட் சாப்பிட்டால் இப்படியெல்லாம் நடக்குமா.? அதிர்ச்சி தகவல்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular