
காலையில் எழுந்ததும் காலியாக இருக்கும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் இருக்கின்றன. காபி மற்றும் தயிர், பேரீட்சை பழம் ஆகியவற்றையெல்லாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம். அதிகாலையில் வெறும் வயிற்றில் ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இவை, நமது செரிமான சாறுகளுடன் கலந்து நெஞ்செரிச்சல் மற்றும் பிற இரைப்பை பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். பேரிச்சம் பழங்களில் பிரக்டோஸ் இருப்பதால், வெறும் வயிற்றில் உண்ணும்போது சிலருக்கு வயிற்று வலி ஏற்படவும் வாய்ப்புள்ளது.