
காலையில் கொய்யா இலை… நைட் கருஞ்சீரகம்: தொப்பை இருக்கும் இடமே தெரியாம போயிரும்: டாக்டர் சொல்லும் டிப்ஸ்.
மாரடைப்பு முதல் தொப்பை வரை பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்ததாக கருஞ்சீரகம் மற்றும் கொய்யா இலைகள் ஆகியவை கருதப்படுகிறது. இவற்றை எப்படி மருந்தாக எடுத்துக் கொள்வது என தற்போது காணலாம்.
பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு கருஞ்சீரகம் மற்றும் கொய்யா இலைகள் ஆகியவை அருமருந்தாக விளங்குவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இரவில் கருஞ்சீரகத்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் தொப்பை குறையுமெனக் கூறப்படுகிறது. மரணத்தை தவிர மற்ற அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தும் அளவிற்கு இதில் மருத்துவ குணங்கள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக, கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி, தேனுடன் கலந்து சாப்பிடலாம். இதனை சுமார் 1-2 கிராம் வரை உட்கொள்ளலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை குறையும். மேலும், சர்க்கரை நோயையும் கருஞ்சீரகம் கட்டுக்குள் வைத்திருக்கும்.
இதேபோல், கொய்யா இலையும் மருத்துவ குணம் நிறைந்தது. கொய்யா இலையையும் மருந்தாக தயாரித்து சாப்பிடலாம். அந்த வகையில், 5 கொய்யா இலைகள், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் வெந்தயம், 5 ஆவாரம் பூக்கள் அனைத்தையும் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீர் அரை கிளாஸ் அளவிற்கு வற்றியதும் வடிகட்டி குடிக்கலாம்.