
காலை நேரத்தில் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் அதனை தினதோறும் செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமும் மனம் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது..
காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக சைக்கிள் ஓட்டுவது நம் உடலை புத்துணர்ச்சியாகும் உடல் ரத்த ஓட்டத்தை சீராகவும் வைத்திருக்கிறது, உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அன்றைய நாள் சிறப்பாக தொடங்குவதற்கு வழிவகிக்கிறது, சைக்கிள் ஓட்டுவதனால் உடல் எடை குறையவும் மனதில் உள்ள பாரங்கள் குறையவும் சிறந்த தீர்வாக அமைகிறது, எலும்புகளை வலுப்படுத்தவும் தசைகளை வலுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது, மேலும் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் மாரடைப்பு இதய நோய்கள் கொலஸ்ட்ராலை தடுக்கிறது என்று இடைநல மருத்துவர் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர் இதனால் தினந்தோறும் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உடல் எடை கட்டுப்பாடு இருப்பது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது..!!