
காலையில் நாம் தூங்கி எழுந்ததும் முதலில் எதை பார்க்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..?? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்..??
ஒரு சிலர் காலையில் தூங்கி எழுந்ததும் தனது உள்ளங்கைகளை பார்த்து அந்த நாளை தொடங்குவார்கள். ஒரு சிலர் தூங்கி எழுந்ததும் அவர்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வமான படங்களை பார்த்து அந்த நாளை தொடங்குவார்கள். இந்நிலையில் காலை தூங்கி எழுந்ததும் எதை முதலில் பார்க்க வேண்டும் அப்படி பார்த்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
காலையில் தூங்கி எழுந்ததும் அதிர்ஷ்டம் தரக்கூடிய சில பொருட்களை பார்ப்பது மிகவும் நல்லது. காலையில் தூங்கி எழுந்ததும் முதல் வேலையாக சாமி படங்களை பார்க்கலாம். சூரிய உதயத்தை பார்ப்பது நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
காலையில் எழுந்ததும் கடிகாரத்தை பார்த்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். காலை எழுந்ததும் கண்ணாடி பார்ப்பது மிகவும் நல்லது. தூங்கி எழுந்ததும் நறுமணமிக்க மலர்களை பார்த்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என கூறப்படுகிறது.