
காலையில் பள்ளி குழந்தைகளுக்கு ராகி மாவில் இந்த டிபன் செஞ்சி கொடுங்க..!!
பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் நாளைக்கு என்ன சமைப்பது என்பதுதான். இது உண்மை தானே. ஏனென்றால் தினமும் அனைவருக்கும் பிடித்தவாறு மற்றும் குறிப்பாக குழந்தைகள் சாப்பிடும்மாறு அந்த வகையில் என்ன சமைக்க வேண்டும் என்பதை யோசிப்பதே ஒரு மிகப்பெரிய வேலையாக உள்ளது என்று பல பெண்கள் நினைக்கிறார்கள். அவர்களின் நேரத்தை ஈஸியாக தான் இந்த ரெசிபி. ஆம் ஆம் பள்ளி குழந்தைகளுக்கு காலையில் என்ன சமைக்கலாம் என்று குழப்பமாக இருக்கிறீர்களா. தினமும் தோசை இட்லி தானா என்று உங்கள் குழந்தைகள் கேட்கிறதா. அப்போ சத்தான இந்த ராகி ரொட்டியை செஞ்சு கொடுத்து பாருங்க ஆரோக்கியமாகவும் இருக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. அது எப்படி பண்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
ராகி ரொட்டி செய்ய ஒரு கப் ராகி மாவு தேவையான அளவு முருங்கை கீரை ஒரு பெரிய வெங்காயம் சிறிதளவு உப்பு சிறிதளவு வெல்லம் நெய் மற்றும் தனி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் மற்றும் எண்ணெய் இதையெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் போட்டு சிறிது நேரம் நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கி வந்த பிறகு நாம் எடுத்து வைத்திருந்த முருங்கைக்கீரை சேர்த்து முருங்கைக்கீரை நன்றாக வெந்து வர வேண்டும். தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. முருங்கைக்கீரை கொஞ்ச நேரம் நன்றாக வதங்கிய பிறகு சிறிதளவு உப்பு போட்டு பின்பு தான் சிறிதளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். முருங்கைக்கீரை நன்றாக வெந்ததும் அடுப்பை ஆப் செய்ய வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்திருந்த ராகி மாவு மற்றும் இந்த முருங்கைக்கீரை வெங்காயத்தை சேர்த்துதண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பிசைந்து வைத்த மாவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கையில் தட்டி தோசை கல்லில் போட்டு நெய் ஊற்றி ரொட்டி போல் சுட்டு எடுத்தால் ஆரோக்கியமான ராகி ரொட்டி தயார். இதை குழந்தைகளுக்கு கொடுத்துப் பாருங்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.