
காலையில் வெந்நீர் பருகினால் நம் உடலில் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா..??
காலையில் வெந்நீர் குடிப்பதன் மூலம் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் வெந்நீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வெந்நீர் குடிப்பதால் என்ன பயன்கள் என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி விட்டு டீ காபிக்கு பதிலாக வாம் வாட்டர் (வெந்நீர் மிதமான சூட்டில்) குடித்து வந்தால் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை கரைக்கிறது. எனவே உடல் எடை குறைய வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த மெத்தடை பாலோ பண்ணி பாருங்க. அதுமட்டுமின்றி இவ்வாறு நாம் வெந்நீர் அருந்துவதால் உணவின் எச்சங்களையும் உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றி செரிமானத்திற்கு நன்கு உதவுகிறது.
உடலில் உள்ள அமில காரசமநிலையை பராமரிக்க மிகவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி இவ்வாறு நாம் வெந்நீர் அருந்துவதால் சரும செல்களை பாதுகாத்து சருமம் நல்ல பொலிவுடன் காணப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த வெந்நீருடன் எலுமிச்சை சாறு கலந்து பருகுவது நல்ல பலனைத் தரும்.