காலையில் எழுந்தவுடன் பிரஷ் செய்துவிட்டு வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது மிகவும் ஆரோக்கியமான ஒரு செயலாகும். இவ்வாறு வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உள்ளது. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் செரிமான மண்டலம் மேம்பட்டு பசியை தூண்டும். இதனால் உடல் ஆரோக்கிய மேம்படும்.. காலையில் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலின் மூளை முடுக்குகளில் உள்ள கழிவுகள் நம்முடைய சிறுநீர் மூலமாக முழுவதுமாக வெளியேற்றப்படும். மேலும் நுரையீரல் பிரச்சனை மற்றும் மூச்சு திணறல் பிரச்சினை உள்ளவர்கள் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரித்து ஆக்சிஜனை அதிகப்படியாக உள்ளிருக்க இது மிகவும் உதவுகிறது. ஒரு சிலர் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதையே தவிர்க்கின்றனர். ஒரு சிலர் காலையில் பெட் காஃபி உடன் தான் அந்த நாளைய தொடங்குகின்றனர். இது முற்றிலும் தவறாகும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நம் உடல் புத்துணர்ச்சியோடு அந்த நாளே மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். உடலுக்கு நீர்ச்சத்து என்பது மிகவும் அவசியமான ஒன்று. எனவே ஒரு நாளைக்கு வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதோடு ஆரம்பித்து ஒரு நாள் முழுவதும் 3 லிட்டர் தண்ணீர் ஆவது நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அல்சர் போன்ற வயிற்று பிரச்சனைகளில் இருந்து தண்ணீர் குடிப்பதால் நாம் தப்பிக்கலாம். மேலும், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முதலில் நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால் வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி உடல் எடை குறைய உதவும்.