
இன்றைய நவீன காலகட்டத்தில் அனைவரும் வேலைக்கு செல்கின்றனர். ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறோமா என்றால் அதுவும் கேள்வி குறித்தான். கையில் என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிட்டுவிட்டு வேலை வேலை என்று வேலைக்காக ஓடி விடுகிறோம். இவ்வாறு கையில் கிடைக்கும் உணவுகளை எல்லாம் சாப்பிடுவதால் தான் பல நோய்கள் நம்மை வந்து தாக்குகின்றன. இந்த நிலையில் ஒரு சில உணவுகளை எல்லாம் காலையில் மறந்தும் கூட சாப்பிடக்கூடாது அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்திலும் பல் கூட விளக்காமல் பெட் காபி குடிக்கும் நபர்கள் இருந்து தான் வருகிறார்கள். காபி என்பது அவ்வளவு நல்ல ஆரோக்கியம் தரும் உணவு அல்ல. இந்த நிலையில் காலையில் வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் உயிருக்கே ஆபத்து என்கிறது ஆராய்ச்சி. அதே போன்று தான் குழந்தைகளுக்கு ஒரு சில பெற்றோர்கள் எழுந்தவுடன் பால் குடிக்கவில்லை இல்லை எதுவும் சாப்பிடவில்லை என்றால் எழுந்தவுடன் வாழைப்பழம் ஊட்டி விடுவார்கள் அது மிக மிக தவறான செயல். இவ்வாறு குழந்தைகளும் சரி பெரியவர்களும் சரி எழுந்தவுடன் வாழைப்பழம் உண்பதால் இதய நோய்கள் வந்து உயிர் போகும் அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். காலையில் எழுந்தவுடன் இனிப்பு சாப்பிடுவதால் நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே இவற்றையெல்லாம் காலையில் எழுந்தவுடன் உண்பதே தவிர்த்து விடுங்கள்.