
நமது உடல் ஆரோக்கியமாக இருக்க காலை நேர நடை பயிற்சி மிகவும் முக்கியம்….
காலை நேர நடை பயிற்சி மேற்கொள்ளுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம், காலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்ளுதல் மூலம் அன்றைய நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாகவும் புத்துணர்வாகவும் காணப்படும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும், காலை நடை பயிற்சியை மேற்கொள்ளும் பொழுது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும், அதேபோல் காலையில் நடை பயிற்சி மேற்கொள்ளுவதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் இதய மேம்பாட்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும், மேலும் காலையில் நடை பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கிறது தசைகள் மற்றும் எலும்புகள் உறுதி தன்மையை பெறுகிறது, காலை நடைப்பயிற்சி இரவில் நிம்மதியாக தூங்க உதவும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் உடலில் உள்ள உள் உறுப்புகள் ஆரோக்கியம் நிறைந்ததாக காணப்படும், உடல் சுறுசுறுப்பாகும் புத்துணர்வாகவும் ஹார்மோன்கள் ஆரோக்கியத்துடன் செயல்படும்..!!