
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கண்காட்சி திடல் அமைக்கப்பட்டது. இதனை வெளியூர் மற்றும் உள்ளுரை சேர்ந்தவர்கள் பார்வையிட்டு சென்றனர். நேற்று முன் தினம் பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு ஏர்வாடியில் வசிக்கும் முகமது சுஹைல்(16) என்பவர் தனது நண்பர்களுடன் கீழக்கரைக்கு சென்று உள்ளார்.
இதனை அடுத்து முகமது சுஹைல் கண்காட்சியை பார்த்துவிட்டு திரும்பி செல்லும் போது உட்கார்ந்திருந்த ஒருவரது காலை மிதித்து விட்டதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அந்த நபரும், அவரது நண்பர்களும் இணைந்து 11-ஆம் வகுப்பு மாணவரான முகமதுவை கடுமையாக தாக்கி ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினர்.
இதனை தடுக்க முயன்ற மாணவரின் வலது கையில் காயம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி சென்றனர். இதனை அடுத்து காயம் அடைந்த மாணவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.