நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு அவசர ஊர்தி முகாம் இன்று அம்மா மாவட்ட ஒன்றிய கழகச் செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ளது..
நாமக்கல் மாவட்டம் எழுச்சி பாளையம் ஒன்றியம் ஆன்ட்ராபட்டி பகுதியில் கால்நடை மருத்துவ அவசர ஊர்தி, கால்நடை மருத்துவ முகாமினை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் தொடங்கி வைத்துள்ளார், தொடர்ந்து இந்த நிகழ்வில் ஆன்ட்ராபட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பாக நடத்தினர், கால்நடை மருத்துவர் ஊர்தியானது கால்நடைகளின் அவசர காலங்களுக்கு பயன்பட வேண்டும் என்றும் கால்நடைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்று திமுக பொதுச் செயலாளர் மதுரா செந்தில் பேசியுள்ளார், திட்டமானது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார், இதனால் அவூர்மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்..!!