கால்நடை மருத்துவமனை அமைக்க அமைச்சரிடம் திமுகவினர் மனு!!…

கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தி. மு. க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமையிலான தி. மு. க. வினர் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர் அதில் கூறியிருப்பதாவது: –

செங்கோட்டை ஒன்றியம் புதூர் பேரூராட்சி, கடைய நல்லூர் ஊராட்சி ஒன்றியம் காசிதர்மத்தில் கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும். புதூர் பேரூராட்சி பகுதியில் உள்ளவர்கள் தங்கள் கால்நடைகளை செங்கோட்டைக்கு சுமார் 10 கிலோமீட்டர் தூரம் கால்நடைகளை அழைத்து வந்து மருத்துவ வசதிகளை பெற வேண்டி உள்ளது. மேலும் கேசவபுரம் பகுதியில் அதிகமான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. எனவே கேசவபுரத்தில் கால்நடை மருத்துவமனை அமைப்பது மிகவும் அவசியமாகிறது. அதேபோல காசிதர்மத்தில் அதிகமான ஆடு, மாடுகள் வளர்க்கப்படுகின்றன.

இந்த பகுதியில் வளர்க்கப்படுகிற ஆடு, மாடுகளுக்கு நோய் வந்தால் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடையநல்லூருக்கு செல்ல வேண்டி இருக்கிறது. அல்லது அச்சம் புதூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே புதூர் பேரூராட்சி கேசவபுரத்திலும், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் காசிதர்மத்திலும், கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவினை பெற்றுக் கொண்ட கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

நிகழ்ச்சியின் போது செங்கோட்டை ஒன்றிய தி. மு. க. செயலாளரும், (செ)புதூர் பேரூராட்சி தலைவருமான ரவிசங்கர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமி துரை, முன்னாள் கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் காசி தர்மம்துரை, தொழிலதிபர் மாரித்துரை, ராமானுஜம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

Read Previous

பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்..! முதல் படத்திலேயே கோடியில் சம்பளம்..!!

Read Next

“புரிந்து கொள்வதற்கு பதிலாக உணருங்கள்..! நீங்கள் உணரும்போது எல்லாம் தானாக புரியும்”..!கிறிஸ்டோபர் நோலன் தாரக மந்திரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular